பிறந்தநாள் பார்ட்டியில் வினோத போட்டி; விஸ்கி குடித்தவர் மாரடைப்பால் மரணம்.!



  in Thailand a Man Drinks Whisky Dies 

போதைப்பொருள் உடல்நலனுக்கு நீண்ட கெடுதலை தரும் என்பது உண்மை எனினும், அதனை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உடனடி மரணமும் நேரும் என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது இந்த செய்தித்தொகுப்பு.

தாய்லாந்து நாட்டில் வசித்து வருபவர் தன்கரின் கான்த் (வயது 21). இவர் தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று இருக்கிறார். அச்சமயம், அங்கு கொண்டாட்டம், மதுவிருந்து நடந்துள்ளது.

அப்போது, ஆர்வமிகுதியால் மதுபானம் அருந்தும் போட்டியும் நடைபெற்றதாக தெரியவருகிறது. அதாவது, ஒரு நபர் ஒரே நேரத்தில் 350 மில்லி அளவுள்ள இரண்டு விஸ்கி பாட்டிலை குடித்தால், ரூ.75 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: உடலை தூய்மைப்படுத்த தவளை பானம்; வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு நடிகை பலி.. மதபோதகர் பரிதாபங்கள்.!

மயங்கி விழுந்து மரணம்

இதனால் தன்கரின் ஆர்வமிகுதியால் போட்டியில் கலந்துகொள்ள, 20 நிமிடத்தில் இரண்டு பாட்டிலையும் காலி செய்து இருக்கிறார். பின் திடீரென மயங்கி விழுந்தவரை மீட்ட நண்பர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். 

அங்கு நடந்த சோதனையில் தன்கரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானது தெரியவந்தது.

இதையும் படிங்க: விமானம் விழுந்து 38 பேர் பலியான விவகாரம்; அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரிய ரஷ்ய அதிபர்.!