தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
புகைப்பழக்கம் கொண்டவரா நீங்கள்? உங்களின் நுரையீரல் இப்படித்தான் இருக்குமாம்.. உஷார்.!
இன்றளவில் புகைப்பழக்கம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் - பெண்கள் பேதமின்றி ஏற்பட்டுள்ளது. கலாச்சார மோகம், முந்தைய காலங்களின் அடக்கநிலை போன்றவை இன்று வரம்பை மீறிய விடுதலையை கொடுத்துவிட்டது.
இதனால் உடல் நலத்தை கெடுப்பதில் ஆண்களும் - பெண்களும் போட்டிபோட்டு செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் புகைப்பழக்கம் ஏற்பட்டு புகைபிடிப்போரை மட்டுமல்லாது, அப்பழக்கம் இல்லாத நபர்களையும் நேரடியாக பாதிக்கிறது.
இதையும் படிங்க: ஆபாச படம் பார்க்க தொந்தரவு.. தாய், தந்தை உட்பட 5 பேர் கொலை.!! 15 வயது சிறுவன் வெறி செயல்.!!
30 ஆண்டுகளாக நாளொன்றுக்கு ஒரு சிகிரெட் பாக்கெட் வீதம் புகைப்பழக்கம் கொண்ட 52 வயது முதியவரின் நுரையீரல் காணொளி
Lungs of a 52-year-old man who smoked a packet of cigarettes a day for 30 years. 🫁
— Dr. Meenakshi 🩺 (@Dr__Meenakshi) August 24, 2024
pic.twitter.com/OQJZXbDXXR
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில், சீனாவில் வசித்து வரும் 52 வயது முதியவர் இறந்ததும், அவரின் நுரையீரல் அடைந்த பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகிரெட் வீதம், சுமார் 30 ஆண்டுகள் புகைபிடித்த நபரின் நுரையீரல் முழுவதும் கருப்பாக தோன்றியுள்ளது.
புகைபிடிக்கும் நபரின் நுரையீரலுக்கும்,புகைப்பழக்கம் இல்லாத நபரின் நுரையீரலுக்கும் இடையே உள்ள வேறுபாடு
This video shows the difference between healthy lungs and those of a smoker. pic.twitter.com/1YnJaPItII
— Creepy.org (@creepydotorg) July 3, 2024
அதேபோல, புகைப்பழக்கம் கொண்ட நபரின் நுரையீரல் செயல்படும் விதமும், புகைப்பழக்கம் இல்லாத நபரின் நுரையீரல் செயல்படும் விதமும் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. இந்த காணொளி புகைப்பழக்கம் கொண்ட நபர்களின் வாழ்நாளுக்கு இறுதிமணி அடிக்கும் என்பதை உணர்ந்து, முன்கூட்டியே சுதாரித்து செயல்படுவது நல்லது என்பதற்காக விழிப்புணர்வுக்காக இணைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளம் பயன்படுத்தியதால் ஆத்திரம்.!! தாய், தங்கையை கொடூரமாக கொலை செய்த நபர்.!!