மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆபாச படம் பார்க்க தொந்தரவு.. தாய், தந்தை உட்பட 5 பேர் கொலை.!! 15 வயது சிறுவன் வெறி செயல்.!!
அமெரிக்காவில் ஆபாச படம் பார்க்கவிடாமல் தொந்தரவு செய்ததால் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவனை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள கிங் கவுண்டி காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட 11 வயது சிறுமி, தனது 15 வயது சகோதரன் பெற்றோர் மற்றும் சகோதரர்களை சுட்டு கொலை செய்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கிருந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட தாய், தந்தை மற்றும் சகோதரர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை அனுப்பினர்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், ஆபாச படம் பார்க்க விடாமல் அவனது சகோதரன் தொந்தரவு செய்ததால் தனது சகோதரர்கள் மற்றும் பெற்றோரை அந்த சிறுவன் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அவனது 11 வயது சிறுமி இறந்தது போல் நடித்து தப்பித்து இருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சிறுவனை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சமூக வலைதளம் பயன்படுத்தியதால் ஆத்திரம்.!! தாய், தங்கையை கொடூரமாக கொலை செய்த நபர்.!!
நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக கிங் கவுண்டி காவல் நிலையத்தின் டிடெக்டிவ் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரம்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் கொலை.!!