பூமிக்கு அடியில் வசிக்கும் மக்கள்; ஆச்சரியமூட்டும் அதிசய கிராமம்..!!



People who live underground; Surprising miracle village..!!

தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் உள்ள கிராமம். இந்த கிராமத்தில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் உள்ளன. 

தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 3500-க்கும் மேற்பட்ட வாழ்ந்து வருகின்றனர். 1500 வீடுகள் உள்ளன. வீடுகள் அனைத்தும் நிலத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ளது தான் உலகின் தனி சிறப்பாகும்.

world

இந்த கிராமத்தில் தேவாலயம், வணிக வளாகங்கள், அலுவலகங்கள், ஹோட்டல்கள், சினிமா தியேட்டர்கள், அருங்காட்சியம், பார் என அனைத்தும் இங்கு உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த நிலத்தடி கிராமத்தில் இணைய வசதி கூட இருக்கிறதாம். ஒரு காலத்தில் இந்த கிராமம் பாலைவனமாக இருந்ததால், இங்கு காலத்திற்கு ஏற்ப தட்ப வெப்பநிலை சரியாக இல்லாமல் மக்கள் அவதிப்ட்டுள்ளனர். 

world

பின்பு 1915-ஆம் வருடம் சுறங்கப்பணி ஆரம்பிக்கப்பட்டது. பின்பு மக்கள் அதில் தங்க ஆரம்பித்தனர். தற்பொழுது எல்லா பருவ காலங்களிலும் எந்தவாரு சிரமமும் இல்லாமல் தட்ப வெப்பநிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல ஹாலிவுட் படங்களும் இங்கு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.