உள்நாட்டுப்போரால் பயங்கரம்; பெண்கள், குழந்தைகள் என ஈவு-இரக்கமின்றி 200 பேர் கொலை.!



Sudan Home Terror 200 Killed Today 

 

சூடான் நாட்டில் உள்நாட்டில் கிளர்ச்சிப்படை தாக்குதல் நடத்திய சம்பவம் உலகளவில் நெஞ்சை பதறவைத்துள்ளது. இன்று நடைபெற்ற தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 200 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. 

ஆப்ரிக்காவில் உள்ள சூடான் நாட்டில், மிகத்தீவிரமாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இதனால் அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசு நிர்வாகம் என்பது செயல்பாட்டில் இல்லை. 

இதையும் படிங்க: 14 வயது சிறுவனை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்த திருநங்கை; கழிவறையில் பயங்கரம்..! 

World news

இன்று 200 பேர் கொலை

அப்போது வரை உள்நாட்டுப்போரில் சுமார் 60000 மக்களை இழந்துள்ள சூடான், உள்நாட்டிலேயே 80 இலட்சம் இடம்பெயரவையும் எதிர்கொண்டு இருக்கிறது. அரசு ஆதரவு படைகள் - கிளர்ச்சிப்படைகள் இடையே போர் தொடருகிறது.

இந்நிலையில், அங்குள்ள ஒயிட் நைல் மாகாணம், அல்-கிடடா நகரில் கிளர்ச்சிப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பெண்கள், குழந்தைகள் என 200 பேர் கொல்லப்பட்டனர். 

சூடானில் நடந்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடருவதால், அந்நாட்டின் மக்கள் தத்தளித்து தவித்து வருன்றனர். 

இதையும் படிங்க: பிரதமரை நோக்கிய கேள்விக்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையில் கலகலப்பு.!