பிரதமரை நோக்கிய கேள்விக்கு பதிலளித்த டொனால்ட் ட்ரம்ப்; வெள்ளை மாளிகையில் கலகலப்பு.!



Donald Trump Answers Modi Question 

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 2 நாட்கள் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் செய்து இருந்தார். இந்த பயணத்தில் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்காவில் உள்ள செய்தியாளர்கள், அமெரிக்கா அரசுத்துறை நிர்வாகத்தில் ஜோ பைடன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாக செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினர். 

இதையும் படிங்க: உக்ரைனுக்கு பேரிடி.. கைவிரித்த ட்ரம்ப்? அழைப்பு விடுத்த புதின்.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.!

பிரதமர் நரேந்திர மோடி அக்கேள்விக்கு பதில் அளிக்க முன்வந்தபோது குறுக்கிட்ட டொனால்ட் ட்ரம்ப், இது உங்களின் கேள்வி, இருந்தாலும் நானே பதிலை அளிக்கிறேன் என பேசி, பதில் அளித்தார். 

இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அமெரிக்கா அதிபரின் செயல் அவையோரிடம் புன்முறுவலை ஏற்படுத்தியது. கேள்வி எழுப்பிய செய்தியாளர் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசியது, அதனை புரிந்துகொள்ள சில நொடிகளை எடுக்க வேண்டி இருந்தது. 

ஆனால், பிரதமருக்கு ஒன்றுமே தெரியவில்லை என இந்திய எதிர்க்கட்சிகள் விடியோவை பகிர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றன.
 

இதையும் படிங்க: இறுதி நேரம் குறித்த ட்ரம்ப்.. ஹமாஸுக்கு உச்சகட்ட எச்சரிக்கை..!