அதர்வாவின் நிறங்கள் மூன்று திரைப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு: படத்தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!



Actor Adharva Starring Nirangal Moondru Movie U Certificate by Sensor Team 

 

கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர்கள் அதர்வா & சரத் குமார், ரஹ்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் நிறங்கள் மூன்று. 

இப்படத்திற்கு ஜாப்ஸ் பீஜோய் இசையமைத்து இருக்கிறார். கருணாமூர்த்தி படத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். 

படம் 2024ல் திரைக்கு வர தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டன. 

இந்நிலையில், படத்தின் எடிட்டிங் பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று, படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது படத்தை பார்த்துள்ள தணிக்கை குழு யு சான்றிதழ் அளித்து இருக்கிறது. இதனை படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படம் திரையரங்கில் வர ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.