TNPL கிரிக்கெட்டர் மீது மனைவி பரபரப்பு புகார்.. வரதட்சணை கொடுமை, தனிமை காட்சிகள் வீடியோ எடுத்து மிரட்டல்., அதிர்ச்சி தகவல் அம்பலம்.!



in Coimbatore a Girl Complaint Against Husband fame in TNPL Cricket 


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியகாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் 25 வயது இளம்பெண், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், "எனக்கும்-கோவையில் வசித்து வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர் என்னை வேலைக்கு அனுப்பி, பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். நான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை அறிதும், மாடிப்படி ஏறி-இறங்கு என கருவை கலைத்தார். உன் அம்மா வீட்டுக்கு சென்று பணம், நகை வாங்கி வா என கிரிக்கெட் போட்டால் அடிக்கிறார். 

கணவர் தொந்தரவு

எனது மாமியாரிடம் இதனை கூறினால், அவர் அவரின் கள்ளகாதலருக்கு எனது போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர் வாட்ஸப்பில் ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொல்லை கொடுக்கிறார். இவ்வாறான மனவேதனையுடன் நான் இருந்தபோது, குளித்துவிட்டு துணி மாற்றினால் கூட, மாமியாரின் கள்ளகாதலர் மறைந்து வந்து பார்க்கிறார். எனது கணவரிடம் அதனை கூறினால், அவருக்கு ஒத்துழைத்து செல் என கூறுகிறார். 

Coimbatore

ஆபாச வீடியோ வெளியிடுவேன் என மிரட்டல்

நான் எனது கணவருடன் தனிமையில் இருந்த விடீயோவையும் கணவர் வீடியோ எடுத்து வைத்துள்ளார். மேலும், உனது அம்மாவின் வீட்டிற்கு சென்று பணம், நகை வாங்கி வராத பட்சத்தில், ஆபாச வீடியோ வெளியாகும் என மிரட்டுகிறார். என்னை நிர்வாணப்படுத்தி முட்டி போட வைத்து சிரித்து மகிழ்கிறார். பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளவர், சில நேரம் அவர்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருக்கிறார். அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: கோவை மத்திய சிறையில் அதிர்ச்சி சம்பவம்: 45 வயது கைதி மர்ம மரணம்.!

இதையும் படிங்க: கோவை: கணவன் - மனைவி சண்டையில் விபரீதம்; மனைவியை சுட்டுக்கொன்று, கணவர் தற்கொலை.!