திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. வேற லெவல்! நடிகர் மம்முட்டிக்கு ஆஸ்திரேலியாவில் கிடைத்த மாபெரும் கெளரவம்.! செம ஹேப்பியில் ரசிகர்கள்!!
மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல வெற்றி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். நடிகர் மம்முட்டி இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
71 வயது நிறைந்த அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் இளமையாக வலம் வருகிறார். நடிகர் மம்முட்டி தற்போது பிரம்மயுகம் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரது கலை சேவையை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் மம்முட்டியின் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானிஸ், ஃப்ரெண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஆண்ட்ரூ சார்டன் எம்.பி ஆகியோர் பங்கேற்று நடிகர் மம்முட்டி உருவம் பதித்த தபால் தலையை இந்தியாவின் தலைமை கமிஷனர் மன்ப்ரீத் வோராவிடம் வழங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்த சிறப்பு தபால் தலை சந்தைக்கு வந்துள்ளது. இது மம்முட்டி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது