உடலை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி மாணவன்; பரபரப்பு உண்மையை கூறிய நடிகை.!



actor-aaditi-pohankar-molested-by-a-school-boy-in-mumba

 

தான் புறநகர் இரயிலில் பயணம் செய்யும்போது, பள்ளி மாணவர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக நடிகை அதிதி போஹங்கர் கூறிய தகவல் பதறவைத்துள்ளது. 

 

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் அதிதி போஹங்கர், தனது சிறுவயது அனுபவங்கள் குறித்து தனியார் சேனலுக்கு பேட்டி அளித்து இருந்தார் அப்போது அவர் பேசுகையில், இரயில் பயணத்தில் பள்ளி மாணவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவித்து அதிர்ச்சி கொடுத்தார். 

இதையும் படிங்க: Big News: விஜய் டிவி நிர்வாகத்துக்கு மறைமுக முட்டுக்கட்டை? இணையத்தில் பற்றிய தீ.. மும்மொழிக்கொள்கை விவாதத்தை ஒளிபரப்ப தடை?

cinema

பாலியல் தொல்லை

இதுகுறித்து நடிகை அளித்த பேட்டியில், "நான் உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தேன். அப்போது, 18 வயது இருக்கும். பலாலி சீருடையில் பெண்கள் இரயில் பெட்டியில் பயணம் செய்தேன். அப்போது ஒரு பள்ளி மாணவர், எனது உடல் அங்கத்தை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். காவலரிடம் சென்று புகார் அளித்தால், அவர் என்னிடம் ஆதாரம் கேட்டார். அப்போது வந்த பெண் காவலர் ஒருவரிடம் சொன்னபிறகு, அவர் விசாரித்தபோது மாணவர் உண்மையை ஒப்புக்கொண்டார்" என கூறினார்.

இதையும் படிங்க: #Breaking: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி; அப்பலோ மருத்துவமனையில் அனுமதி.!