தாய்லாந்தில் ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றும் சந்தானம் பட நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்.!

கடந்த 2014ம் ஆண்டு, சந்தானம் நடித்து வெளிவந்த "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்" என்ற படத்தில், சந்தானத்துக்கு ஜோடியாக அறிமுகம் ஆனவர், ஆஷ்னா சவேரி. தொடர்ந்து "இனிமே இப்படித்தான்" என்ற படத்திலும் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா நடித்திருந்தார்.
மேலும் ஆஷ்னா சவேரி, மீன்குழம்பும் மண் பானையும், இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, நாகேஷ் திரையரங்கம், கன்னித்தீவு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் ஆஷ்னா சவேரியால் வெகுவாக ரசிகர்களை ஈர்க்க முடியவில்லை.
இந்நிலையில், ஜானகிராம் இயக்கத்தில், கலையரசன், ஆனந்தி ஆகியோருடன் ஆஷ்னா சவேரி நடித்துள்ள "டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்" என்ற திரைப்படம் 2024ம் ஆண்டு வெளியாகத் தயாராகி வருகிறது.
இந்நிலையில், ஆஷ்னா சவேரி இன்ஸ்டாகிராமில் பிட்னெஸ் குறித்த பதிவுகளைத் தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார். தற்போது நண்பர்களுடன் தைவான் நாட்டிற்குச் சென்றுள்ள ஆஷ்னா, அங்குள்ள தாய்பெய் நகரத்தில் எடுத்த ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு கவனத்தைக் கவர்ந்துள்ளார்.