மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாஷின் டாக்சிக் படத்தில் இணையும் ரஜினி பட நடிகை.! அட.. யார்னு பார்த்தீங்களா?? பரவும் தகவல்!!
யாஷின் டாக்சிக்
கேஜிஎஃப் படத்தில் நடித்ததன் மூலம் இந்தியளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெரும் பிரபலமாக இருப்பவர் நடிகர் யாஷ். அவர் தற்போது கே.வி.என் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் டாக்சிக் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார்.இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அக்கா ரோலில் நயன்
மேலும் இந்த படத்தில் நடிகை கரீனா கபூர் அக்காவாக நடிக்கவிருந்தாராம். ஆனால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அவர் படத்திலிருந்து விலகிவிட்டாராம். இந்த நிலையில் அவருக்கு பதிலாக நடிகை நயன்தாராவை அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாதாகவும், ஆனால் அவர் அதிகளவில் சம்பளம் கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது .
இதையும் படிங்க: என்னது.. பிரபல மாஸ் நடிகருக்கு அக்காவாகிறாரா நயன்தாரா.! அதுக்கு சம்பளம் இத்தனை கோடியா??
டாக்சிக் படத்தில் இணையும் ஹீமா குரேஷி
இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி டாக்சிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் ரஜினியின் காலா, அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஏராளமான ஹிந்தி, மலையாளம் மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: யாஷின் டாக்சிக் திரைப்படம்; முதற்பார்வை அப்டேட் இதோ.!