மக்களுக்கு சேவை செய்யவே.. பாஜகவில் இணைந்தார் பிரபல ஹிந்தி நடிகை.!



Actress rupali ganguly join in bjp

 நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 2வது கட்டமாக ஏப்ரல் 26ந் தேதி தேர்தல் நடைபெற்றது. அடுத்தடுத்த கட்ட தேர்வுகள் வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் நிலையில் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் பல அரசியல் தலைவர்கள் கட்சி மாறும் சம்பவங்களும், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அரசியல் கட்சியில் இணையும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று  ஹிந்தி நடிகையான ரூபாலி கங்குலி என்பவர் பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.

Rupali ganguly

ஹிந்தி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான அவர் 
பாஜக தேசிய பொதுச்செயலாளரான வினோத் தவ்டே என்பவரது முன்னிலையில் பாஜக கட்சியில் இணைந்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரூபாலி கங்குலி, பிரதமர் மோடியின் வழியை பின்பற்றி நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவே பாஜகவில் நான் இணைந்துள்ளேன்
 எனக் கூறியுள்ளார்.