திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மொட்டை மாடியில் தோழியுடன் சிலம்பம் சுற்றும் நடிகை மாளவிகா மோகனன்.! ரசிகர்களை மிரள வைத்த புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
தங்கலான் படத்தில் மாளவிகா
இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகன் தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக கொண்டு உருவாகும் இந்த படத்திற்காக அவர் ஏராளமான கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் சிலம்பப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளாராம்.
இதையும் படிங்க: ஏன் இவ்ளோ கவர்ச்சி?? ரசிகர்களின் கேள்விக்கு செம கூலாக பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன்!!
சிலம்பம் சுற்றும் நாயகி
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது மொட்டை மாடியில் தனது தோழியுடன் சிலம்பம் சுற்றும் மற்றும் ரிலாக்ஸாக படுத்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஏன் இவ்ளோ கவர்ச்சி?? ரசிகர்களின் கேள்விக்கு செம கூலாக பதிலளித்த நடிகை மாளவிகா மோகனன்!!