ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பேரழகு.. யங் ஹீரோயின்கள் ஓரம்போகணும்.. கொள்ளை அழகில் ரசிகர்களை சொக்கவைத்த நடிகை ஸ்ரீ தேவி.!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் இளைய மகள் ஸ்ரீ தேவி. அவர் சத்யராஜ் மற்றும் குஷ்பு நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ரிக்ஷா மாமா என்ற படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது கியூட்டான நடிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டார்.
சினிமா துறையில் நடிகை ஸ்ரீ தேவி
தொடர்ந்து ஸ்ரீதேவி தெலுங்கில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த ஈஸ்வர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அவர் தமிழில் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோயினானார். அதனை தொடர்ந்து அவர் பிரியமான தோழி, ஜீவாவுக்கு ஜோடியாக தித்திக்குதே, தனுஷ் உடன் தேவதையை கண்டேன் போன்ற சில படங்களிலேயே நடித்துள்ளார். ஆனாலும் அவர் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
இதையும் படிங்க: செம ஹாட்... லோ நெக் உடையில் அசர வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! சூடேத்தும் புகைப்படங்கள்!!
கொள்ளை அழகில் போட்டோஷூட்
நடிகை ஸ்ரீ தேவி 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து
கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் அவர் கொள்ளை அழகில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் யங் ஹீரோயின்களையே ஓரம்கட்டி செம கியூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதையும் படிங்க: தாவணி பாவாடையில் ஜொலிக்கும் ஜெயம் நாயகி.! இப்பவும் எப்படி இருக்காங்க பார்த்தீங்களா!!