"என் வீடு சுடுகாடு ஆகிருச்சே, அனாதை ஆக்கிட்டானே" - மறைந்த விஜே சித்ராவின் தாய் குமுறல்.!
நீயா நானா கோபிநாத் கல்யாணதப்போ எப்படியிருக்கார் பார்த்தீர்களா! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுவரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து தனது தெளிவான உச்சரிப்பு, ஆழமான கருத்தால் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து பிரபலமானவர் கோபிநாத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமான கோபிநாத் சிகரம் தொட்ட மனிதர்கள், என் தேசம் என் மக்கள், நடந்தது என்ன உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் அவரை பெருமளவில் பிரபலமடைய செய்தது நீயா நானா நிகழ்ச்சிதான்.
இந்நிலையில் கோபிநாத் கடந்த 2010ஆம் ஆண்டு துர்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வெண்பா என்ற அழகிய மகள் உள்ளார். இந்த நிலையில் தற்போது கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது.