பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!



Bigg Boss Tamil Season 8 Elimination 28 Dec 2024 


பிக் பாஸ் சீசன் 8 தமிழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 83 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ, இன்னும் 3 வாரத்திற்குள் இறுதிக்கட்டத்தை எட்டுகிறது. 

காதலை வெளிப்படுத்திய சௌந்தர்யா

இதனால் போட்டியாளர்களின் ஆட்டமும் விறுவிறுப்பு பெற்றுள்ளது. கடந்த வாரம் வரை சண்டை, சச்சரவு என தொடர்ந்தது, இந்த வாரம் குடும்பத்தினரின் வரவால் களைகட்டி இருந்தது. சௌந்தர்யா தனது காதலர் விஷ்ணுக்கு காதலை தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெப்ரி அடித்ததால் வலியில் துடித்த ராணவ் மருத்துவமனையில் அனுமதி.! கையில் கட்டு.! ரெட் கார்டு கன்பார்ம்.!!

டபுள் எவிக்சன்

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அன்ஷிதா, ஜெப்ரி ஆகியோர், இந்த வாரத்தில் மக்களின் வாக்குகளை குறைவாக பெற்று இருக்கலாம் எனவும், அவர்கள் இருவரும் நடப்பு வாரத்தில் வீட்டில் இருந்து டபுள் எவிக்சன் முறையில் வெளியேறலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளன. 

எனினும், இன்று மற்றும் நாளை என இருவரின் வெளியேற்றம் தொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டதும் அவை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: "கதவை திறக்குறேன் வந்துருங்க" - பிக்பாஸ் 8 கோவா குழுவுக்கு விஜய் சேதுபதி எச்சரிக்கை.!