#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன் முறையாக வெளியான நடிகர் அருண் விஜய்யின் அழகிய மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வலம்வரும் நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். பிரபல குணசித்ர நடிகர் விஜயகுமாரின் மகன்தான் அருண் விஜய் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். 1977 ஆம் ஆண்டு பிறந்த இவரின் உண்மையான பெயர் அருண் குமார். படத்திற்க்காக தனது பெயரை அருண் விஜய் என மாற்றிக்கொண்டார்.
குழந்தை பருவதில்லையே தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தனது 18 வது வயதில் முறை மாப்பிளை என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். குறைந்த வயதில் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பெருமை அருண் விஜய்யே சேரும்.
முறை மாப்பிள்ளை படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தில் இவரது நடனமும், சண்டை போடும் காட்சிகளும் பாராட்டை பெற்றது. அடுத்தடுத்து பல்வேறு படஙக்ளில் ஒப்பந்தமான இவர் குறிப்பிட்ட இடைவெளியில் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
அதன்பின்னர் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் மாஸ் வில்லனாக ரீ என்ட்ரி கொடுத்து மீண்டும் பிரபலமானார். அதனை தொடர்ந்து குற்றம் 23 , தடம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் அருண் விஜய்.
இவரது திருமணம் வாழ்க்கையை பொறுத்தவரை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மோகன் அவர்களின் மகள் ஆர்த்தி என்பவரை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு புர்வீ என்ற மகளும், அர்னவ் என்ற மகனும் உள்ளனர். இதுவரை பெரிதாக வெளிவராத இவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.