#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி.! வீடியோ எடுத்த ரசிகரின் போனை வேகமாக புடுங்கி டெலிட் செய்த அஜித்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை நிலைநாட்டியிருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்றும், தல என்றும் ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வந்தனர்.
மேலும் நடிகர் அஜித் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'துணிவு'. இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இப்படத்திற்கு பின்பு உலகம் முழுவதும் சுற்றுலா சென்று அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வந்தார் அஜித்.
இதனை அடுத்து தற்போது மகிழ்த்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பல பிரச்சனைகளை தாண்டி தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால் அஜித் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும் அவர் தனது குடும்பத்துடன் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும், தனது மகளின் பிறந்தநாளிற்காகவும் சென்றுள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. இதன் வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இது போன்ற நிலையில் துபாயிலிருந்து ஏர்போர்ட்டுக்கு வந்த அஜித்தை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனை பார்த்த அஜித் அவரை அருகில் அழைத்து மொபைலை வேகமாக புடுங்கி வீடியோவை டெலிட் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அஜித்தை பலரும் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
Video ah எடுக்கிறா ??
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) January 4, 2024
அத குடு இங்க ...Deleted😂 pic.twitter.com/Ygwf28Z7q3