மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த ஜென்மத்துல அது நடக்காது! சிவா மிகபெரிய துரோகம் செஞ்சுட்டாரு.! புயலை கிளப்பிய பிரபல இசையமைப்பாளர்!!
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால்பதித்து பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால், விடாமுயற்சியால் முன்னேறி தற்போது விஜய், அஜித், சூர்யா, தனுஷ் வரிசையில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அவருக்கென சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சிவகார்த்திகேயன் படங்களின் வெற்றிக்கு அவற்றில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய காரணம்.
அவ்வாறு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் டி. இமான். Iஆனால் கடந்த சில வருடங்களாக இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் டி இமான், சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார். என்னால் அதனை வெளியே சொல்ல முடியாது.
தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது ரொம்ப கஷ்டம். ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு இருக்கலாம். பல விஷயங்களை நான் மூடி மறைப்பதற்கு காரணம் குழந்தைகளின் எதிர்காலம்தான் என கூறியுள்ளார்.