#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
எதிர்நீச்சல் சீரியலை விட்டு விலகுகிறாரா மாரிமுத்து.. பேட்டியில் கூறிய உண்மை.?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களில் பிரபலமான சீரியலாக இருப்பது எதிர்நீச்சல். இந்த சீரியலின் டிஆர்பி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் போகின்றது. இந்த சீரியலின் கதைக்களம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
ஆணாதிக்கத்தையும், பெண் அடிமையை எதிர்க்கும் விதமாகவும் இந்த சீரியலின் கதைக்களம் அமைந்துள்ளதால் தொலைக்காட்சி ரசிகர்கள் மட்டுமல்லாது இணையவாசிகளும் இந்த சீரியலை பற்றி பேசி வருகின்றனர்.
எதிர்நீச்சல் சீரியலில் ஏஜிஎஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாரிமுத்துவின் கதாபாத்திரத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். வில்லன் நடிகருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு இருப்பது இதுவே முதல் முறையாகும். இவர் இந்த சீரியல் நடிப்பதற்கு முன்பு சில திரைப்படங்களில் துணை இயக்குனர் மற்றும் நடிகராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட மாரிமுத்துவிடம் வேறு ஏதும் சீரியலில் ஏன் நடிக்கவில்லை என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டார். அதற்கு அவர், "எதிர்நீச்சல் சீரியலின் கதை பிடித்திருப்பதால் தான் சீரியலில் நடிக்க வந்தேன். மேலும் இந்த சீரியல் 1500 எபிசோடுகளை தாண்டி ஓடும் என்று இயக்குனர் கூறியதால் வேறு ஏதும் சீரியலில் நடிக்கவில்லை" என்று கூறினார்.