"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
அடேங்கப்பா.. செம ஜாக்பாட் தான்! பிரபல டாப் ஸ்டாரின் படத்தில் நடிக்கும் ஜி.பி முத்து.! எந்த ஹீரோவுடன் பார்த்தீங்களா!!
டிக்டாக் மற்றும் யூடியூப்பில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஜி.பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த இவர் வெளியிடும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் செம ட்ரெண்டாகும். இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியான வசனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவ்வாறு பிரபலமான அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் அவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பும் இருந்தது. ஆனால் அவர் தனது பிள்ளைகளை காண வேண்டும் என குடும்பத்தின் மீது கொண்ட ஏக்கத்தால் தானாகவே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ரசிகர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
ஜி.பி முத்து சன்னி லியோன், நடிகர் சதீஷ் நடிப்பில் உருவாக்கியுள்ள ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது அவருக்கு அஜித் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது மேலும் அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.