பிராங்க் பெயரில் மிரட்டல்.. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. வாட்சப்பில் ஆடியோ வெளியிட்டு சோகம்.!



Tiruppur Nallur College Student Suicide Case 


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர், பச்சையப்பன் நகர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக இருந்து வருகிறார். நாகராஜின் மனைவி வேலுமணி. தம்பதிகளுக்கு 21 வயதுடைய சத்திய நாராயணன் என்ற மகன் இருக்கிறார். இவர் கோவை மாவட்டம், காளப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஒன்றில், மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். 

இதனிடையே, கடந்த ஜன.4 அன்று, காலை நேரத்தில் சத்திய நாராயணன் தனது வீட்டில் இருந்த நிலையில், அறையில் இருந்து வெளியே வரவில்லை. மகனை எழுப்பி பார்த்தும் பலனில்லாததால், கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் தூக்கில் சடலமாக தொங்கினார். 

வாட்சப் ஆடியோ

தகவல் அறிந்து வந்த நல்லூர் காவல்துறையினர், நாராயணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முன்னதாக மாணவர் தனது பேராசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்சப்பில் ஆடியோ ஒன்றை அனுப்பி இருக்கிறார். 

இதையும் படிங்க: 5-ம் வகுப்பு சிறுமி செய்யும் காரியமா இது.? வீடு திரும்பிய தாய் கண்ட அதிர்ச்சி காட்சி.!

Tiruppur

அந்த ஆடியோவில், "நான் இனிமேல் எப்படி கல்லூரிக்கு செல்வது?. அன்று அவர்கள் போனில் தொடர்புகொண்டு மிரட்டியது பயமாக இருக்கிறது. இரவில் தூக்கம் ஆறவில்லை. மீண்டும் என்னை வந்து மிரட்டினால் என்ன செய்வது?" என கூறியுள்ளார். சுமார் 3 நிமிடம் அந்த ஆடியோ பதிவு இருந்தது. 

மிரட்டி தாக்கியதால் சோகம்

இதனையடுத்து, விசாரணையில் சத்திய நாராயணனை சக மாணவர்கள் பிராங்க் என்ற பெயரில் தொடர்புகொண்டு மிரட்டி நக்கலடித்து இருக்கின்றனர். இரண்டு மாணவர்கள் சேர்ந்து நாராயணனை தாக்கி, அதனை வீடியோ எடுத்தும் வைத்துள்ளனர். இதனால் பிறந்தநாள் அன்று மாணவர் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி தகவல் அம்பலமானது. மேலும், மாணவரை தாக்கி, மிரட்டிய 3 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இதுகுறித்த விசாரணை தொடருகிறது. 

இதையும் படிங்க: விஷம் கலந்த குளுக்கோஸை உடலில் ஏற்றி உயிரைவிட்ட மருத்துவர்; குடும்பத்தகராறில் விபரீதம்.!!