அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
கணவன் - மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு; திடீர் மழையில் அறுந்த மின்கம்பியால் சோகம்.!
மதுரை மாவட்டத்தில் உள்ள டிவிஎஸ் நகர், துரைசாமி சாலை பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் (50). இவரின் மனைவி பாப்பாத்தி (44). தம்பதிகள் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்கள்.நேற்று இரவில் கடையை அடைத்துவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தனர்.
மின்சாரம் தாக்கி துயரம்
அச்சமயம், வழியில் மழை காரணமாக உயர் மின்னழுத்த கம்பி ஒன்று அறுந்து கிடந்துள்ளது இதனை கவனிக்காமல் மின்சார கம்பியின் மீது முருகேசன் இருசக்கர வாகனத்தை ஏற்றி இருக்கிறார். இதில் மின்தாக்குதலுக்கு உள்ளாகிய முருகேசன், பாப்பாத்தி ஆகியோர் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை; சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
கணவன் - மனைவி ஒருசேர பலி
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சுப்பிரமணியபுரம் காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. தம்பதிகளின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எரியும் 29 கான்க்ரீட் கற்களை 30 நொடிக்குள் உடைத்து கின்னஸ் சாதனை; பாகிஸ்தான் சாதனையை முறியடித்த தமிழன்.!