அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
நடுவழியில் பெண் பயணியை இறக்கிவிட்ட தமிழக அரசுப்பேருந்து நடத்துனர்; கட்டைப்பைக்கு ரூ.500 கேட்டு இழிச்செயல்.!
பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு புறப்பட்ட பெண்ணை, நடுவழியில் இறக்கிவிட்டு தவிக்கவைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லணை பகுதியில் வசித்து வருபவர் ஷர்மிளா. இவர் கணவரை இழந்த கைம்பெண் ஆவார். தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் கல்லணை வீட்டில் இருக்கின்றனர். இதனிடையே, கோவையில் வேலை பார்த்து வந்த கைம்பெண், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மகள்களுக்கு துணி, பலகாரம் வாங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: தமிழகத்தை உயர்கல்வியில் இருந்து கீழே தள்ள முயற்சி? - முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனம்.!
கட்டைப்பைக்கு ரூ.500 கேட்டு அடாவடி
பின் சொந்த ஊர் வருவதற்கு கோவையில் இருந்து திருச்சி பேருந்தில் ஏறிய நிலையில், பேருந்தின் நடத்துனர் பெண் வைத்திருந்த கட்டைப்பைக்கு ரூ.500 இலஞ்சம் கேட்டுள்ளார்.
எனக்கு பயணசீட்டு ரூ.160 , அதே கட்டணம் தருகிறேன், இன்னொரு பயணசீட்டு முறையில் வேண்டுமானாலும் பதிவு செய்து டிக்கெட் கொடுங்கள் என்று கூறியும் கேட்காத நடத்துனர், பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டுள்ளார்.
இரண்டு அரசு பேருந்து நடத்துனர்கள் அதிர்ச்சி செயல்
இதனிடையே, பின்னால் வந்த மற்றொரு திருச்சி பேருந்தில் அவர் ஏறிய நிலையில், பெண்ணை முதலில் இறக்கிவிட்ட பேருந்து உணவு நிறுத்துமிடத்தில் தென்பட்டுள்ளது. அங்கு இரண்டு பேருந்து நடத்துனர்களும் சந்தித்துக்கொண்டுள்ளனர்.
பின் பேருந்து புறப்பட்ட சிலமணித்துளிகளில் பெண்ணிடம் மற்றொரு பேருந்தின் நடத்துனரும் ரூ.500 லஞ்சம் கேட்டு, ஆட்கள் அரவமற்ற இடத்தில், நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர்.
காரில் வந்தவர்கள் உதவிக்கரம்
இதனால் கண்ணீருடன் காத்திருந்த பெண்மணிக்கு, காரில் சென்றவர்கள் விபரத்தை கேட்டறிந்து உதவியுள்ளனர். மேலும், அவரை கரூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டவர்கள், பேருந்து ஓட்டுநர் & நடத்துனருக்கு எதிராக புகார் பதிவும் செய்துள்ளனர்.
கரூரில் இருந்து திருச்சிக்கு வேறொரு பேருந்தில் வந்த பெண்மணி, தற்போது பத்திரமாக வீடு சென்று சேர்த்துள்ளார். நடுவழியில் பெண் பயணியை இரக்கமின்றி இறக்கிவிட்ட இரண்டு அரசுப்பேருந்துகளின் ஓட்டுநர் & நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: பொங்கல் பரிசு ரூ.1000 ரத்து எதனால்? அமைச்சர் தங்கம் தென்னரசு பரபரப்பு பதில்.!