அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
"200 கோடிக்கு சொத்து இருக்கு, 30 இலட்சத்துக்கு கொலை அவசியம் கிடையாது" - நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கொலை விவகாரத்தில் தகவல்.!
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், தனது தோட்டத்தில் மர்மமான முறையில் எரிந்தவாறு சடலமாக கிடந்தார். அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்கையில், அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது உறுதியானது.
சர்ச்சையில் சிக்கும் முக்கியப்புள்ளிகள்:
பணம் கொடுக்கல் வாங்கலில், அரசியல் விவகாரத்தில் ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டதாக அவர் எழுதிய கடிதங்கள் கூறுகின்றன. அதில் அம்மாவட்டத்தை சேர்ந்த அரசியல்புள்ளிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
இதனால் இந்த கொலையை செய்தது யார்? என தனிப்படை காவல் துறையினர் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெயக்குமாரின் மரண விவகாரத்தில் எனக்கு துளியும் சம்பந்தம் இல்லை என ஆனந்த ராஜா கூறியுள்ளார்.
ஆனந்தராஜா விளக்கம்::
ஜெயக்குமார் எழுதிய கடிதத்தின்படி, ஆனந்தராஜா சர்ச்சையில் சிக்கி இருந்தார். ஆனால், அவர் அளித்துள்ள விளக்கத்தில், என்னிடமே ரூ.200 கோடி சொத்து இருக்கிறது. நான் எதற்காக ரூ.30 இலட்சத்திற்கு கொலை செய்ய வேண்டும்? என கூறினார்.