#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வில்லனாக மாறிய விஜய் டிவி சரவணன் மீனாட்சி பிரபலம்! எந்த படம் தெரியுமா?
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமானது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகள்.
அதேபோல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அதில் ஒன்றுதான் சரவணன் மீனாட்சி. சரவணன் மீனாட்சி முதல் சீஸனின் மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் நடித்தனர். முதல் சீசன் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து சீசன் இரண்டு ஆரம்பமானது. அதில் நடிகர் இர்பான் கதாநாயகனான நடித்தார். அதன்பின்னர் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் சரவணன் மீனாட்சி தொடரில் இருந்து பாதியில் வெளியேறினார்.
இதுவரை பட்டாளம், எதிர் வீடு, ரூ, பொங்கி எழு மனோகரா போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், இதில் எந்த படமும் அவருக்கு பெரிதாக அமையவில்லை. ஆனாலும் சுண்ணாட்டம் படம் தான் அவருக்கு ஓரளவிற்கு சொல்லும்படியாக அமைந்தது.
தற்போது இயக்குனர் சேரன் நடிக்கும் ராஜாவுக்கு செக் படத்தில் வில்லனான நடிக்கிறார் இர்பான். ஹீரோவாக நடித்த இர்பான் தற்போது வில்லனாக நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.