அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
தனது மரணத்தை முன்கூட்டியே கணித்தாரா எஸ்.பி.பி! வெளியான தகவலால் கண்ணீர்விடும் ரசிகர்கள்!
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் தனது வசீகர குரலால் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டவர் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள். கொரோனோ தொற்றால் கடந்த மாதம் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் எஸ்.பி.பி அவர்கள் காஞ்சி காமகோடி பீடத்துக்கு நன்கொடையாக கொடுத்த நெல்லூர் திப்பராஜூவாரி தெருவில் அமைந்துள்ள பரம்பரை இல்லத்தில் தனது பெற்றோரின் உருவ சிலையை வைக்க விரும்பி, ஆந்திரா, கிழக்கு கோதாவரி கொத்தபேட்டையை சேர்ந்த பிரபல சிற்பி ராஜ்குமார் உடையாரிடம் சிலைகளை வடிவமைத்து தருமாறு ஆர்டர் செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் கடந்த ஜூன் மாதம் மீண்டும் சிற்பி ராஜ்குமாரை தொடர்பு கொண்டு தனது சிலையையும் வடித்து தருமாறு கேட்டுள்ளார்.மேலும் கொரோனா ஊரடங்கால் நேரில் வர முடியவில்லை என கூறி புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிற்பி ராஜ்குமார் கூறுகையில், எஸ்.பி.பியின் சிலையை வடித்து முடித்தநிலையில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதும் அவரிடம் ஒப்படைக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்த செய்தி தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எஸ்.பி.பி தனது மரணத்தை முன்கூட்டியே கண்டித்து விட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளனர்.