மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம்பெண்ணை 4 வருடமாக போதைக்கு அடிமையாக்கி சீரழித்த தொழிலதிபர்.. 3 மனைவிக்காரர் கைதில் பரபரப்பு தகவல்.!
முகமது ஷெரிப் என்பவனால் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட மகளின் வாழ்க்கையை காப்பாற்ற கிருத்துவ பெண்மணி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பிடம் உதவிகேட்டு முதற்கட்ட நீதி பெற்ற சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா மாவட்டம், மங்களூர் பிஜாய் பகுதியை சார்ந்த கிருத்துவ பெண்மணிக்கு 22 வயதில் மகள் இருந்துள்ளார். கிருத்துவ பெண்மணி மங்களூர் விசுவ இந்து பரிஷத் அமைப்புக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், "எனது 22 வயது மகள் கடந்த 4 வருடமாக போதைப்பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார். தொழிலதிபர் முகமது ஷெரீப் (வயது 47) என்பவர், மகளுக்கு போதைப்பொருள் கொடுத்து அடிமையாக்கி இருக்கிறார். போதைப்பொருளை கொடுத்து பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக உருவா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை. இதனால் உங்களின் அமைப்பு மூலமாக போதைப்பொருள் பிடியில் சிக்கியுள்ள மகளை மீட்கவும், மகளை போதைக்கு அடிமையாக்கி துஷ்ப்ரயோகம் செய்த முகமது ஷெரிப் மற்றும் அவனது நண்பர்களுக்கும் உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என ஒரு தாயாக மகளுக்காக மடிப்பிச்சை கேட்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள். மகளின் வாழ்க்கையை காப்பாற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மங்களூர் மாநகர காவல் ஆணையர் சசிகுமாரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்பேரில், சூரத்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது ஷெரிப்பை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.
விசாரணையில், "3 திருமணம் செய்துள்ள முகமது ஷெரீப்பின் முதல் மனைவி கோவாவில், மற்றொரு மனைவி மஹாராஷ்டிராவில் வசித்து வருகிறார்கள். மூன்றாவது மனைவி மங்களூரில் வசித்து வரும் நிலையில், கிருத்துவ பெண்ணின் மகளை போதைக்கு அடிமையாக்கி முகமது ஷெரிப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கிருத்துவ பெண்ணுக்கும் முகமது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்" என்பது உறுதியானது. முகமது ஷெரிப்பை கைது செய்த அதிகாரிகள், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.