மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; நீதிகேட்ட போராட்டத்தில் கல்வீச்சு.. பதற்றம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள படலாப்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் இருபாலர் தனியார் பள்ளியில், 4 வயதுடைய சிறுமி எல்.கே.ஜி பயின்று வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பள்ளியின் தூய்மை பணியாளர் ஒருவரால் பாலியல் தொல்லையை எதிர்கொண்டதாக தெரியவருகிறது.
இந்த விஷயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, புகாரை காவல் ஆய்வாளர் ஏற்றுக்கொள்ள மறுத்து அலட்சியப்படுத்தி இருக்கிறார். இதனால் கடந்த 2 நாட்களாக அவர்கள் போராடிபார்த்த நிலையில், 3 வது நாள் விஷயம் சமூக ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
மக்கள் வீதியில் இறங்கி போராட்டம்
இதனால் உடனடியாக விசாரணையை முன்னெடுக்காத காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், 2 காவலர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு, இன்று படலாப்பூர் பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இதையும் படிங்க: கரும்புத்தோட்டத்தில் வைத்து சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம்; வீடியோ எடுத்து வாட்ஸப்பில் பரப்பிய கொடுமை.!
அதன் ஒருபகுதியாக படலாப்பூர் இரயில் நிலையத்தில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உண்டாகி இருக்கிறது. காவல் துறையினர் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டாலும், பள்ளி நிர்வாகம் மற்றும் தாமதமாக நடத்தப்பட்ட விசாரணை குறித்த விவகாரத்தால் ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் இறங்கி இருக்கின்றனர். இரயில் நிலையத்தில் நடந்த கல்வீச்சு சம்பவத்தால், அவ்வழியே இயங்கும் இரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.
महाराष्ट्र के बदलापुर में पथराव, रेप की घटना के बाद हंगामा#Badlapur #MaharashtraBadlapur pic.twitter.com/nLzC1ylzcW
— Zee Business (@ZeeBusiness) August 20, 2024
இதையும் படிங்க: 40 ரூபாய் உப்மா ரூ.120க்கு விற்பனை.. ஹோட்டலை விட Zomato-வில் 3 மடங்கு அதிக கட்டணம்.!!