மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டுக்கட்டா என் பொண்டாட்டி லஞ்சம் வாங்குறா: நேர்மையின் சிகரமாக பாசமிகு கணவர்.! ஆதாரத்துடன் போட்டுக்கொடுத்த சம்பவம்.!
தனது மனைவி ரூ.30 இலட்சம் அளவில் லஞ்சம் வாங்கி, கட்டுக்கட்டாக பணத்தை வீட்டில் வைத்திருப்பதாக கணவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில், துணை செயற் பொறியாளராக வேலை பார்த்து வருபவர் திவ்ய ஜோதி. இவரின் கணவர் ஸ்ரீபாட். தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இதையும் படிங்க: கட்டிடத்தை இடிக்கும் பணியில் சோகம்; பைனல் டெஸ்டினேஷன் திரைப்பட பாணியில் பகீர் சம்பவம்.!
இதனிடையே, திவ்ய ஜோதி பணியிடத்தில் அதிகளவு லஞ்சம் வாங்குவதாக தெரியவருகிறது. இதனால் கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து வந்து தனது வீட்டின் அறைகளில் தனித்தனியாக சேமித்து வைத்துள்ளார்.
மனைவிக்கு நேர்மை பாடம் எடுத்த கணவர்
இதனை கண்டறிந்த கணவர் மனைவியின் செயல்பாடுகளை கண்டித்தும் பலனில்லை என கூறப்படுகிறது. இதனால் ஒருகட்டத்தில் விரக்தியடைந்தவர், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற முடிவெடுத்துள்ளார்.
மேலும், தனது மனைவியின் செயலுக்கு தக்க பாடம் புகட்ட நினைத்த கணவர், மனைவி லஞ்சம் வாங்கி வைத்துள்ள பணக்கட்டுகளை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதன் மதிப்பு ரூ.30 இலட்சம் வரை இருக்கும் என கூறப்படும் நிலையில், ஸ்ரீபாத் வெளியிட்டுள்ள வீடியோவில் அதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது வீடியோ வெளியாகி வைரலானதை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியன் 2 போல
கணவரின் செயலுக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவித்து வருகிறது. முன்னதாக நடிகர் கமல் நடித்து வெளியான இந்தியன் 2 படத்தில், நேர்மையாக இருக்க வேண்டி தனது பெற்றோர்களை கதையின் நாயகர்கள் கையும் களவுமாக போட்டுக்கொடுத்த காட்சிகள் இடம்பெற்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
లంచం తీసుకుంటున్న భార్యను పట్టించిన భర్త శ్రీపాద్
— Telugu Scribe (@TeluguScribe) October 9, 2024
మనికొండ మున్సిపల్ డీఈఈగా పని చేస్తున్న దివ్యజ్యోతిని మీడియాకు పట్టించిన భర్త శ్రీపాద్.
ప్రతి రోజు తన భార్య దివ్యజ్యోతి అక్రమంగా లక్షలలో లంచం తీసుకొచ్చి ఇంట్లో ఎక్కడ పడితే అక్కడ పెడుతుందని, తప్పంటే నన్ను తిట్టేదని వీడియోలు తీసి… pic.twitter.com/dz6v5sXsCe
இதையும் படிங்க: அடக்கொடுமையே... கதற கதற கற்பழிக்கப்பட்ட மூதாட்டி... காமக்கொடூரன் வெறி செயல்.!!