பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
11 வயது சிறுவன் கடத்திக்கொலை; ரூ.15 இலட்சம் கேட்டு மிரட்டிய கும்பல் அதிர்ச்சி செயல்.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சீதாப்பூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் ஷிவ்யாஸ். சிறுவனின் தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், அவர் தனது மாமா ஷுபம் மிஸ்ராவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே, சிறுவன் சம்பவத்தன்று மாயமாகினார். அவரை காணாது தேடி அலைந்த மிஸ்ரா, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
ரூ.15 இலட்சம் கேட்டு மிரட்டல்
இந்நிலையில், சிறுவனின் மாமாவை தொடர்பு கொண்ட கும்பல் ஒன்று, ரூ.15 இலட்சம் பணம் கொடுத்தால் சிறுவனை விட்டுவிடுவதாக மிரட்டி இருக்கிறது. ஏற்கனவே இவ்விவகாரத்தில் காவலர்கள் விசாரித்து வந்ததால் கடத்தல் கும்பல் உண்மையை உணர்ந்து இருக்கிறது.
இதையும் படிங்க: கை-கால்களை துண்டாக்கி, 17 வயது மகளை கண்டந்துண்டமாக வெட்டிக்கொன்ற தந்தை; அதிரவைக்கும் காரணம்.!
சிறுவன் கொலை
இதனையடுத்து, சிறுவனை கொலை செய்த கும்பல், உடலை ஷர்தா கால்வாயில் வீசி சென்றுள்ளது. சிறுவனின் உடல் இன்னும் மீட்கப்படாத நிலையில், சிறுவனை கொலை செய்ததாக அன்குர் திவேதி, புனீத் சுக்லா, அபிஷேக் சர்மா, ரிங்கு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தை பொறுத்தமட்டில் கடந்த சில ஆண்டுகளாக பணம் கேட்டு குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி இருக்கிறது. இதன் பின்புலத்தில் இருக்கும் செயல்களை கண்டறிந்து விசாரணை நடத்தினால் மட்டுமே மர்மம் விலகும்.
இதையும் படிங்க: பசுவை கடத்தும் கும்பல் என நினைத்து பயங்கரம்; 19 வயது பள்ளி மாணவர் கொலை.!