அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
#Breaking: உக்ரைனில் 2 ஆவது இந்திய மாணவர் மரணம் - மூளை பக்கவாதத்தால் சோகம்..!
உக்ரைன் நாட்டின் மீது பல்முனை தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் நாட்டில் சிக்கி தவித்து வரும் இந்திய மாணவர்களையம், இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பலரும் எல்லைப்பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, உக்ரைனின் அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கப்படுகின்றனர்.
நேற்று கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரியில் இருந்து மருத்துவம் பயில சென்ற நவீன் சேகரப்பா என்ற மாணவர், ரஷியாவின் வான்வழி தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்றொரு இந்திய மாணவருக்கு காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பர்னாலா பகுதியை சேர்ந்த சஞ்சன் ஜிந்தால் என்ற மாணவர், மூளை பக்கவாத (Brain Stroke) பிரச்சனையால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Another Indian student lost his life in Ukraine
— Tractor2ਟਵਿੱਟਰ (@Tractor2twitr) March 2, 2022
He was from Barnala Punjab & as per family members he suffered ishemic stroke
They reached Ukraine to take of him but received no support from Sanjay Rawat, Second Secretary (Edu & Cons) Embassy of India Ukraine
Report: @Gagan4344 pic.twitter.com/nG6dbDUbkl