"என் வீடு சுடுகாடு ஆகிருச்சே, அனாதை ஆக்கிட்டானே" - மறைந்த விஜே சித்ராவின் தாய் குமுறல்.!
அதிரடி நடவடிக்கை... கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரக்சரில் அழைத்துச் சென்ற சர்ச்சை.!! பெண் ஊழியர் சஸ்பெண்ட் .!!
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த 2 கர்ப்பிணிப் பெண்களையும் ஒரே ஸ்ட்ரெச்சரில் வைத்து அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராஜாஜி அரசு மருத்துவமனை
மதுரை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையான ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மதுரை நகரில் அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனையில் அனைத்து நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் இங்கு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான நவீன சிகிச்சைகளும் வழங்கப்படுவதால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பல்வேறு மக்களும் இங்கே சிகிச்சைக்காக வருகை புரிகின்றனர்.
கர்ப்பிணி பெண்கள்
இந்த மருத்துவமனையில் வாடிப்பட்டி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த 2 கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு இதய நோய் இருந்ததால் ஒருங்கிணைந்த பேறுகால மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று இதய நோய் பாதிப்பிற்காக ஸ்கேன் செய்வதற்காக ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை புரிந்தனர்.
இதையும் படிங்க: திருச்சி: 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறை.!! 'JEE' தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவிகள்.!!
ஒரே ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்ற அவலம்
சிகிச்சைக்காக வந்த 2 பெண்களையும் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனை ஊழியர்கள் ஒரே ஸ்ட்ரெச்சரில் அமர வைத்து அழைத்துச் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் நோயாளிகளின் உறவினர்களும் ஸ்ட்ரெச்சரை தள்ளுவது போன்ற காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை மருத்துவர் தெரிவித்திருந்தார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் ஊழியர்
கர்ப்பிணிப் பெண்களை ஒரே ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் சென்றது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு இதில் தொடர்புடைய தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் பெண் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: "சுத்தியலால் ஒரே அடி.." மகன் கண் முன்னே உல்லாசம்.!! தாயின் காதலனுக்கு நேர்ந்த பரிதாபம் முடிவு.!!