வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ்.! தொடர்ந்து 28 நாட்களுக்கு குடித்து பாருங்க.!?



Health benefits of drinking amla juice

நெல்லிக்காய் ஜூஸின் பயன்கள்

பொதுவாக நெல்லிக்காய் என்பது மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் நெல்லிக்காய் நோய்களை குணப்படுத்துவதில் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. நெல்லிக்காய் புளிப்பு சுவையடையது என்பதால் பலருக்கும் சாப்பிடுவதற்கு கடினமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காயை ஜூஸாக குடித்து வந்தால் அது உடலில் பல நோய்களை விரட்டும். எனவே நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

நெல்லிக்காய்

நெல்லிக்காய் ஜூஸில் உள்ள சத்துகள்

நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின்கள், நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்துள்ளது. எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காயை ஜூஸாக செய்து 28 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால் பல வகையான நோய்களை குணப்படுத்துகிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் நெல்லிக்காய் ஜூஸை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இதையும் படிங்க: COOKING TIPS : உணவின் சுவையை அதிகரிக்க இந்த 10 குறிப்புகளை ட்ரை பண்ணி பாருங்க.!?

 

மேலும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளினால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்கிறது. குறிப்பாக செரிமான மண்டலத்தை சீர்படுத்தி, மலச்சிக்கல், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வரவிடாமல் பாதுகாக்கிறது. மற்ற சிட்ரஸ் பழங்களை விட நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் உடலில் ஆக்சிஜனேற்ற பண்புகளை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்குகிறது.

நெல்லிக்காய்

நோய்களை குணப்படுத்தும் நெல்லிக்காய்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் நுரையீரல், கல்லீரல், இரைப்பை போன்ற உறுப்புகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எடையை குறைக்க நினைப்பவர்கள் நெல்லிக்காய் சாறு தினமும் குடித்து வரலாம். இது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து எடை குறைப்பதற்கு உதவி புரிகிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகளையுடைய நெல்லிக்காய் சாறு தினமும் குடித்து வருவது மிகவும் நல்லது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: புடலங்காயை 12 நாட்களுக்கு தொடர்ந்து இப்படி சாப்பிட்டு பாருங்க.! இவ்வளவு நோய்களை குணப்படுத்துமா.!?