#JustIN: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி; சூட்சமத்தை கூறிய நயினார் நாகேந்திரன்.!



Nainar Nagendran about BJP AIADMK Alliance 

 

திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன், அதிமுக - கூட்டணி குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். 

இதுகுறித்து அவர் பேசுகையில், "யார் யார் வீட்டில் பணம் இருக்கிறதோ, அவர்களின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கிறது. திமுக, அதிமுக தரப்பில், பணம் இருப்போரின் வீட்டில் சோதனை நடைபெறுகிறது. இதற்கும், கூட்டணி வற்புறுத்தலுக்கும் சம்பந்தம் இல்லை.

இதையும் படிங்க: #Breaking: கனிமவளக்கொள்ளையை எதிர்த்தவர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; களமிறங்குகிறது சிபிசிஐடி.. அதிரடி உத்தரவு.!

AIADMK

கூட்டணி மீண்டும் பேசினால் உறுதி

ரைடு மூலமாக மிரட்டல் விடுத்தது அதிலாகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு இல்லை. சகோதரர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜக தலைவர்கள் சேர்ந்து பேசினாலே கூட்டணி அமைந்துவிடும். பிற காட்சிகளை மிரட்டி பணியவைக்க வேண்டும் என்ற தேவை இல்லை. பேசினால் போதும்" என பேசினார்.

முன்னதாக கடந்த 2019 மற்றும் 2021 மக்களவை தேர்தலில் கூட்டணியாக அதிமுக - பாஜக களமிறங்கி இருந்த நிலையில், ரெண்டு கட்சிகளுக்கு இடையே நிலவிய கருத்து முரண் காரணமாக கூட்டணி முறிந்தது.  
 

இதையும் படிங்க: #Breaking: அதிமுக முக்கியப்புள்ளி அமைச்சர் முன்பு திமுகவில் இணைவு.. ஈரோடு இடைத்தேர்தல் நிலவரம்.!