வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
"எரும மாடா நீ" - மேடையில் உதவியாளரை கடிந்துகொண்ட திமுக அமைச்சர்.. வீடியோ வைரல்.!
தனது உதவியாளரிடம் அமைச்சர் மேடை வரம்பு மீறி ஒருமையில் பேசி கண்டித்த சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தை சொந்தமாக கொண்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் விவசாய நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மாவட்டத்தின் வளர்ச்சி, துறை சார்ந்த செயல்பாடு என தொடர்ந்து அவர் பணியாற்றி வருகிறார்.
கண்காட்சி & தொடக்கவிழா
இதனிடையே, நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சாவூர் மாவட்டத்தில், வேளாண் உணவு பதப்படுத்துதல், வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கவிழாவில், அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கலந்துகொண்டார்.
இதையும் படிங்க: இது ஆண்ட பரம்பரை - திமுக அமைச்சர் மூர்த்தி பேச்சு.!
பேப்பர் எங்கே?
அப்போது, அமைச்சர் பேசத் தொடங்கிய சமயத்தில், எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம், அவரின் உதவியாளர் கோப்புகளை கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர், உதவியாளரை நோக்கி "எருமை மாடா நீ, பேப்பர் எங்க?" என கேள்வி எழுப்பினார். பதறிப்போன உதவியாளர் கோப்புகளை கொடுக்க, அவர் பேச்சை தொடங்கினார்.
இதனிடையே, மேடை மரபு இன்றி அமைச்சர் உதவியாளரிடம் கடிந்துகொண்டதாக கண்டனங்கள் குவிந்து வருகிறது.
எருமை மாடா டா நீ? பேப்பர் எங்க?.. உதவியாளரிடம் சுயமரியாதை சுடர் அமைச்சர் MRK பன்னீர் செல்வம் டென்சன்#Thanjavur | #Minister | #MRKPanneerselvam | #Tension | #PolimerNews pic.twitter.com/uLJhNWDEkt
— அஸ்வத்தாமன் சேரன் (@Aswathamaa_Ofcl) January 3, 2025
இதையும் படிங்க: "நான் உயிருடன் இருக்கும் வரை விடமாட்டேன்" - அண்ணாமலைக்கு எதிராக பொங்கிய வைகோ.!