#Breaking: "இறுமாப்போடு கூறுகிறேன்" - விஜய்க்கு எதிராக கனிமொழி எம்.பி பாய்ச்சல்.!



  DMK MP Kanimozhi about Vijay Speech on 6 Dec 2024 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய், 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என இறுமாப்புடன் இருக்கும் கட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் சொல்வார்கள் என பேசி இருந்தார். மேலும், அதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருந்த விசிக ஆதவ் அர்ஜுனனும், திமுக ஆட்சியை விமர்சித்து இருந்தார்.

இவ்விவகாரத்திற்கு திமுக தரப்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதில்களை தந்து வருகின்றனர். அமைச்சர் சேகர்பாபு 234 தொகுதியையும் திமுக கைப்பற்றும் என பேசினார். 

கனிமொழி பதில்

இந்நிலையில், திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, "2026 சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெல்வோம். உங்களின் கரங்களில் வெற்றி இருக்கிறது. கட்டுப்பாடோடு நாம் பணியாற்றினால், 200 தொகுதியிலும், வெற்றி நிச்சயம், நான் இறுமாப்போடு சொல்கிறேன். நமக்கு வெற்றி நிச்சயம்" என பேசினார்.

இதையும் படிங்க: #Breaking: "ஆதவ் அர்ஜுனனுக்கு அறிவில்லையா?" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டம்..! 

இதையும் படிங்க: திருமண மண்டப முகாம்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்? - எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.!