#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
உல்லாசம் அனுபவித்துவிட்டு கள்ளக்காதலி கழுத்தை நெரித்து கொலை.. காரணம் என்ன? கள்ளக்காதலன் அதிர்ச்சி வாக்குமூலம்.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பவுஞ்சூர், தர்மாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா (வயது 33). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக, தனது கணவரை பிரிந்து கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கும் நந்திவரம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கள்ளக்காதல் உல்லாசம்
பவுஞ்சூரில் ஜெயராஜ் (வயது 28) என்பவர் திருமணம் முடிந்து மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறி இருக்கிறது. இதனால் கள்ளக்காதல் ஜோடி இருவரும், தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
இதையும் படிங்க: செங்கல்பட்டு: தண்ணீர் வாளியில் தலைகுப்பற சடலமாக கிடந்த 1 வயது குழந்தை.. கண்ணிமைக்கும் நேரத்தில் விபரீதம்.!
இந்நிலையில், கடந்த ஜன.22 அன்று, மாமல்லபுரம் பகுதியில் செயல்படும் தனியார் விடுதிக்கு என்ற ஜோடி, உல்லாசமாக இருக்க ஆயத்தமாகி இருக்கிறது. பின் மாலை சுமார் 3 மணியளவில் உணவு வாங்க வெளியே சென்ற ஜெயராஜ், மீண்டும் அறைக்கு வந்தபோது, சங்கீதா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு சடலமாக இருந்தார்.
தற்கொலை செய்ததாக நாடகம்
தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜெயராஜ் முதற்கட்டமாக அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தபோது, "உல்லாசம் அனுபவிக்க இருவரும் விடுதியில் அறையெடுத்து தங்கினோம். சிலர் அவருக்கு தொடர்புக்கொண்டு பேசினார்கள். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் உணவு வாங்க வெளியே சென்ற சமயத்தில், அவர் தற்கொலை செய்துகொண்டார்" என கூறியுள்ளார்.
நம்பவைத்து உல்லாசம் அனுபவித்து கொடூரம்
அவரின் வார்த்தையில் மர்மம் நீடித்த நிலையில், பிரேத பரிசோதனையில் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு பலியானது உறுதி செய்யப்பட்டது. இதனால் விசாரணையை தீவிரமாக முன்னெடுத்தபோது உண்மை அம்பலமானது. அதாவது, சங்கீதாவுக்கு வேறு சில நபர்களுடன் தொடர்பு இருப்பதாக ஜெயராஜ் சந்தேகித்து இருக்கிறார். இதுகுறித்து இருவரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்துள்ளனர்.
சம்பவத்தன்று சங்கீதாவை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஜெயராஜ், அவருடன் அறையெடுத்து உல்லாசமாக இருந்து, பின் கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியது உறுதி செய்யப்பட்டது. உண்மையை அறிந்த காவல்துறையினர் ஜெயராஜை கைது செய்தனர்.
இதையும் படிங்க: தலைக்கவசம் அணிந்தும் தலைநசுங்கி பறிபோன உயிர்; பேருந்து மோதி சோகம்.!