தலைக்கவசம் அணிந்தும் தலைநசுங்கி பறிபோன உயிர்; பேருந்து மோதி சோகம்.!



  chengalpattu mahendra city road accident Man died 

தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுனரின் அலட்சியத்தால், சாலையில் தலைக்கவசம் அணிந்து சென்றபோதிலும் ஒருவர் விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள மகேந்திரா சிட்டி பகுதியில் சங்கர் என்பவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, தனியார் கல்லூரி பேருந்து ஒன்று அதிவேகத்தில் மற்றொரு பேருந்தை முந்திச்செல்ல முற்பட்டது. அச்சமயம், இருசக்கர வாகன பெட்டியின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. 

இதையும் படிங்க: திண்டுக்கல்: கழன்று ஓடிய சக்கரம்.. தறிகெட்டு பாய்ந்த கார்.. 2 பேர் பலி., 3 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம்.!

accident

தலையில் ஏறி-இறங்கிய பேருந்து

இந்த சம்பவத்தில், கல்லூரி பேருந்து மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த சங்கரின் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரத்தில், சங்கர் தலைக்கவசம் அணிந்தபோதிலும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; தந்தை-மகன் பரிதாப பலி.!