சம்பளம் கேட்ட மனைவியும், கணவனின் அதிரடி பதிலும்.. எடு 5 ஆயிரத்த... இப்படியும் யோசிக்கலாமா பாஸ்?.!



Husband Wife Conversation trending on Facebook 

 

கணவன் - மனைவிக்கு இடையேயான சண்டைக்கும், அது முடிந்தபின் நடக்கும் அன்பு கொஞ்சல்களுக்கும் என்றுமே பஞ்சம் என்பது வந்தது இல்லை. ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த இன்பக்கடிகள் எண்ணிலடங்காத பண்புகள் மற்றும் பற்றுதலை கொண்டவை ஆகும். அந்த வகையில், கணவன் மனைவிக்கு இடையே அன்பான ஒரு உரையாடல் ஒன்று வைரலாகி வருகிறது. 

அந்த உரையாடலில் வீட்டில் வேலை செய்யும் தனக்கு ரூ.10 ஆயிரம் மாத சம்பளம் வேண்டும் என மனைவி கேட்க, கணவரோ தனது சாமர்த்தியத்தால் ரூ.15 ஆயிரத்திற்கு பில் சொல்லி மனைவியின் கோரிக்கையை நிராகரிக்கும் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்த பதிவுக்கு பதில் பதிவு என வியக்கவைக்கும் விபரத்தை சுவாரஸ்யத்துடன் தெரிந்துகொள்ளலாம். 

இதையும் படிங்க: "வேங்கைகளும் இனி தூங்காதடா"... அரிவாளை காட்டி வீடியோ.. சர்ச்சை காணொளி பகீர் வைரல்.!

இந்தியா போன்ற மக்கள்தொகை கொண்ட நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை எழுதப்படாத சட்டமாக பெண்கள் வீட்டில் இருந்தபடி கணவர் மற்றும் குழந்தைகளை கவனிப்பதும், ஆண்கள் வேலைகளுக்கு சென்று பொருட்களை ஈட்டி கொண்டுவருவதும் இருக்கிறது. 

பதிலுக்கு பதில் தரமான சம்பவம்

வேலைகளுக்கு செல்லும் ஆண்களுக்கு நிறுவனத்தின் சார்பில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதனை கொண்டு வந்து குடும்ப செலவுகளை அவர் கவனிக்கிறார். சில வீடுகளில் குடும்ப செலவுகள் அனைத்தும் பெண்களின் கையில் இருக்கும். இன்னும் ஒருபங்கு மேலே பெண்கள் பல வீடுகளை நிர்வகித்து வருகிறார்கள். வேலை-பொருளாதார சமநிலை என்பது இன்றளவில் மேலோங்கி இருக்கிறது. 

அந்த வகையில், நாம் மேற்கூறியவாறு வேளைக்கு சென்றுவரும் கணவரிடம் மனைவி ரூ.10 ஆயிரம் மாத ஊதியம் கேட்க, கணவரோ ரூ.15 ஆயிரத்திற்கு செலவு சொல்லுகிறார். பதிலுக்கு மனைவி ரூ.10 ஆயிரத்திற்கும் கணக்கு சொல்லி, கணவனுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார். அந்த முகநூல் பதிவுகள் பின்வருமாறு., 

Wife : ஏங்க எனக்கு வீட்டு வேலை பார்க்க மாச மாசம் சம்பளம் வேணும்..
Husband : எவ்வளவு வேணும்?..
Wife : 10000 ரூவா வேணும்..
Husband : இப்படி வந்து உக்காரு..இந்த கால்குலேட்டரை புடி..
Wife : சொல்லுங்க..
Husband : ஊர்ல இருக்க உன் சொந்தக்காரனுக்கு எல்லாம் நீயே போன் பண்ணி பேசிறது இல்லாம உங்க அம்மா அப்பா போன் நெம்பர் முதல் கொண்டு உங்க வீட்டு DTH வரைக்கும் ரீசார்ஜ் பண்றீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife : போட்டேங்க..
Husband : உன் தம்பி வண்டிக்கு பெட்ரோல் போடவும்,உன் தங்கச்சி கை செலவுக்கும் எனக்கே தெரியாம என் பாக்கெட்ல ஆட்டையை போட்டு தர்றீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife : ம்..போட்டேங்க..
Husband : உடம்பு சரியில்லாம இருக்க உன் சொந்தக்காரன், வர வருஷக்கணக்கா இழுத்துட்டு கெடக்குற உன் தாத்தானுக்கு எல்லாம் ஆப்பிள்,ஆரஞ்சுனு கலர் கலரா அடிக்கடி வாங்கிட்டு போயி கொடுக்குறீல்ல..அந்த வகைல ஒரு 2000 ரூவா போடு..
Wife : ம்ம்..போட்டேங்க..
Husband : உன் மொகர கட்டைக்கு பேஷியல் பண்றேன்,தலைக்கு கலரிங் அடிக்கிறேன்னு மாசம் ரெண்டு தடவை பியூட்டி பார்லர் போறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
Wife : ம்ம்ம்..போட்டேங்க..
Husband : நீ பார்க்கு,பீச்சு,சினிமானு சுத்தனும்கிறதுக்காக நம்ம பையனை உசுப்பி விட்டு வீக்கெண்ட் ஆனா என்னை கூட்டிட்டு போயி அங்க தண்டம் வெக்குறீல்ல..அந்த வகைல ஒரு 4000 ரூவா போடு..
Wife : ம்ம்ம்ம்..போட்டேங்க..
Husband : எங்க அம்மா கூட உனக்கு சண்டை வர்றப்ப எல்லாம் உப்பையும்,காரத்தையும் அதிகமா போட்டு அவங்களை அப்பப்போ ஹாஸ்பிட்டல் அனுப்புறீல்ல.. அந்த வகைல ஒரு 1500 ரூவா போடு..
wife : ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..
Husband : பத்து பைசா பிராயஜனம் இல்லாத பிரச்சனைக்கு எல்லாம் தாம்தூம்னு குதிச்சு என்னை டென்ஷன் பண்ணி டாஸ்மாக் பக்கம் தலை தெறிக்க ஓட விடுறீல்ல.. அந்த வகைல ஒரு 2500 ரூவா போடு..
Wife : ம்ம்ம்ம்ம்ம்..போட்டேங்க..
Husband : மொத்தம் எவ்வளவு ஆச்சு?..
Wife : 15000 ரூவா..
Husband : நீ என்ன சம்பளம் எதிர்பார்த்த?..
wife : 10000 ரூவா..
Husband : இப்போ அந்த மீதி 5000 ரூவாய கரெக்ட்டா 1 ந்தேதிலருந்து 5 ந்தேதிக்குள்ள உங்கொப்பன் வீட்டுலருந்து வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடுக்குற.. 😂😂😂😜😜😜

ஆத்தி great escape டா சாமி என முடிக்கப்பட்டுள்ள அந்த பதிவின் மற்றொரு தொடக்கத்தில், மனைவி கணவருக்கு ஷாக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பதிவு பின்வருமாறு.,

நன்றிDhivya Hills 

Wife : ஆமா என் அப்பா விட்ல இருந்து எவ்ளோ வாங்கிட்டு வர சொன்ன
Husband : balance 5000
Wife : சரி, நீ calculator ah பிடி
Husband : சரி, சொல்லு!
Wife : டெய்லி உனக்கு breakfast செய்யுற இல்ல ஒரு நாளைக்கு 50rs போடு, 30 நாளைக்கு எவ்ளோ?
Husband : 1500
Wife : உன் டிரஸ் வாஷ் பண்ற இல்ல அதுக்கு ஒரு நாளைக்கு 75rs போடு, 30 நாளைக்கு எவ்ளோ ?
Husband : 2250rs
Wife : வீட்ட தொடச்சு மொப் போட்டு க்ளீனா வச்சி இருக்க இல்ல அதுக்கு ஒரு நாளைக்கு 100 rs podu, 30 நாளைக்கு எவ்ளோ?
Husband: 3000rs
Wife : உனக்கு பிடிச்ச lunch சமைச்சு பேக் பண்ணி குடுத்து விடுர இல்ல அதுக்கு ஒரு நாளைக்கு 75 rs நு 30 நாளைக்கு எவ்ளோ nu போடு
Husband : 2250 rs
Wife : தொவச்ச துணிய காய போட்டு மடிச்சு அத iron பண்ணி எடுத்து வச்சா போட்டுட்டு போற இல்ல அதுக்கு 40 rs nu 30 நாளைக்கு எவ்ளோ nu போடு!
Husband : 1200 rs
Wife : vessels washing ku ஒரு 100 rs nu 30 நாளைக்கு போடு
Husband: 3000rs
Wife : வாரத்துக்கு 2 முறை மார்கெட் போய் எல்லாம் பொருளும் வாங்கிட்டு வர இல்ல அதுக்கு ஒரு 50 rs nu நாலு வாரத்துக்கு எவ்ளோ nu போடு
Husband : 200 rs
Wife : நைட் dinner ku 50rs nu 30 நாளைக்கு எவ்ளோ nu போடு
Husband: 1500 rs
Wife : நீ குளிச்சி போட்ட டவல் எடுத்து காய போட, 2 வேல டீ nu athuku ஒரு 50rs nu 30 நாளைக்கு எவ்ளோ?
Husband : 1500rs
Wife; kitchen la வேலை செய்யும் போது யேண்டி அத எடுத்து குடு, இத எடுத்து குடு nu வேல செய்ய விடாம வேல வாங்குறதுக்கு 50 rs nu 30 நாளைக்கு எவ்ளோ nu போடு
Husband : 1500 rs
Wife ; மொத்தம் எவ்ளோ nu pottiya? இப்போ யாரு யாருக்கு balance தரணும்?
Husband: manthan
Wife : மவனே யாருகிட்ட?!! இனி balance ah எடுத்து வச்சிட்டு சாப்ட வா... என அந்த முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி 

இதையும் படிங்க: பாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வந்த சிக்கல்.. அறிக்கை கேட்ட மத்திய அரசு.. நடந்தது என்ன?.!