போதையில் அட்ராசிட்டி செய்த இளைஞன்.. வெளுத்து எடுத்த பொதுமக்கள்.!



in Chennai Thiruvotriyur Youth Atrocity 


சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில், மதுபோதையில் சுற்றி வந்த இளைஞர் திடீரென பெண்களை தாக்கி இருக்கிறார். தலைக்கவசம் கொண்டு பெண்களை தாக்கி, சில்மிஷ செயலில் ஈடுபட்டு இருக்கிறார். 

இதனால் அதிர்ச்சியடைந்த உள்ளூர் பொதுமக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், போதை ஆசாமியின் அடாவடி தொடர்ந்த காரணத்தால், அவரை பாய்ந்து அடிக்கத் தொடங்கினர்.

chennai

இளைஞரின் மீது தாக்குதல்

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளைஞரை மீட்க முற்பட்டனர். ஆனால், ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் தொடர்ந்து அந்த நபரை சரமாரியாக தாக்கினர். 

இதையும் படிங்க: சென்னை: பெண்களின் கார் துரத்தப்பட்ட விவகாரம்; சிக்கிய கல்லூரி மாணவர்கள் கூட்டம்.. ஒருவர் கைது.!

இதனையடுத்து, பொதுமக்களிடம் இருந்து இளைஞரை மீட்ட காவல்துறையினர், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் ரவிக்குமார் என்பது தெரியவந்தது. 

இளைஞர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: #Breaking: முட்டுக்காடு பகுதியில் நடந்தது என்ன? பெண்களின் காரை மறித்தது யார்? - காவல்துறை பரபரப்பு விளக்கம்.!