உளுந்தூர்பேட்டை: காவு வாங்க காத்திருக்கும் மின்சார கம்பிகள்; உயிரிழப்புக்கு முன் நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்? எதிர்பார்ப்பில் மக்கள்.!



in Kallakurichi Ulunthurpet Electric Lower Line

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, மிகமுக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது.

உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு முக்கிய நகராகவும், பேருந்து போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாகவும் உளுந்தூர்பேட்டை இருக்கிறது. நாளொன்றுக்கு பல்லாயிரம் வாகன போக்குவரத்தை எதிர்கொள்ளும் உளுந்தூர்பேட்டையில், லாரிகள் உட்பட விவசாய பொருட்களை சுமந்து செல்லும் வாகனங்களும் அதிகம்.

Kallakurichi

இந்நிலையில், நகரின் சில பகுதிகளில் தாழ்வான நிலையில் செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கனரக லாரிகள், கரும்பு பாரம் ஏற்றும் லாரிகள் செல்லும்போது, ஒருசில நேரம் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் கருப்பு பாரத்தின் மீது உரசி மின்விபத்து ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியதால் சோகம்; இருவர் மின்னல் தாக்கி பலி.!

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குறிப்பாக டிவிஎன் சாலையில் மின்கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கின்றன. கடந்த மாதத்தில் கரும்பு பாரம் ஏற்றியபடி இவ்வழியே சென்ற டிராக்டரில் மின்கம்பி உரசி தீப்பொறி கிளம்பி இருக்கிறது. இதனால் மக்கள் தலைதெறிக்க ஓட்டமும் பிடித்துள்ளனர். இதனால் மேற்படி அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அதேநேரத்தில், வருமுன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தில் கரும்பு லாரியில் தாழ்வாக சென்ற மின்கம்பி உரசி 2 பேர் பலியாகி இருந்தனர். அவ்வாறான சோகம் நிகழ்வதற்குள் அதிகாரிகள் சுதாரித்து செயல்பட வேண்டும் என உள்ளூர் மக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நன்றிDX Ajith Siva, எங்க உளுந்தூர்பேட்டை

 

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்பூசணியை பறித்ததால் விவசாயி பகீர் செயல்.! போக்ஸோவில் கைது.!