உளுந்தூர்பேட்டை: மழைக்கு மரத்தடியில் ஒதுங்கியதால் சோகம்; இருவர் மின்னல் தாக்கி பலி.!



in Kallakurichi 2 Dies Lightning Attack 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில், நேற்று கனமழை பெய்தது. இதனால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் சற்று குளிர்ச்சியான சூழலை அனுபவித்து இருந்தனர்.

அங்குள்ள பாளி கிராமத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் காசிலிங்கம்.இவரின் பேரன் சூர்யா. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அதேபோல, கிளாமருதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்.

Kallakurichi

இவர்கள் தனித்தனியே வேறு பணிகளுக்காக சென்றபோது, மழை குறுக்கிட்டதன் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புளிய மரத்தின் அடியில் ஒதுங்கி இருக்கின்றனர். அங்குள்ள அரசு ஐடிஐ பகுதியில் உள்ள சாலையோர மரத்தில் மழைக்காக தஞ்சம் புகுந்தனர்.

இதையும் படிங்க: 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்பூசணியை பறித்ததால் விவசாயி பகீர் செயல்.! போக்ஸோவில் கைது.!

அப்போது, திடீரென மரத்தின் மீது மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் காசிலிங்கம், ராமர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், சூர்யா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். நேற்று மழை, மின்னல் காரணமாக உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மூதாட்டியை ஆவேசமாக தள்ளிவிட்ட காவலர்.. உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி.!