வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
விஷம் கலந்த குளுக்கோஸை உடலில் ஏற்றி உயிரைவிட்ட மருத்துவர்; குடும்பத்தகராறில் விபரீதம்.!!
வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது 32). மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். சென்னை மேடவாக்கம் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கும் - மணிகண்டனுக்கு திருமணம் நடைபெற்றது.
பிரிவால் மனஉளைச்சல்
தம்பதிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், கடந்த ஒரு ஆண்டுகளாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதால், பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதனால் மணிகண்டன் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திருட்டு வழக்கில் கைதான மகன்; விசாரணைக்கு பயந்து தாய் தற்கொலை.!
தற்கொலை
இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில், மணிகண்டன் குளுக்கோஸ் ஏற்றியவாறு பேச்சு-மூச்சின்றி இருந்தார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் விஷம் கலந்த குளுகோஸை உடலில் செலுத்தி தற்கொலை செய்தது அம்பலமானது.
இதையும் படிங்க: கடலூர்: வரதட்சணை எங்க? திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை.. கணவரின் தொந்தரவால் சோகம்.!