திருட்டு வழக்கில் கைதான மகன்; விசாரணைக்கு பயந்து தாய் தற்கொலை.!



  in Tirunelveli a Accuse Mother Dies By Suicide 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் அடகுக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 250 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணைக்கு பயந்து குற்றவாளியின் தாய் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது. 

250 சவரன் நகை, ரூ.3 இலட்சம் கொள்ளை

நெல்லை மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ரேமன் (வயது 45). இவரின் அடகு கடாயில் கடந்த 2024 ஆகஸ்ட் 22 அன்று 250 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், ரூ.3 இலட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக 5 மாதங்களாக எந்த விதமான துப்பும் கிடைக்கவில்லை. 

இதையும் படிங்க: கடலூர்: வரதட்சணை எங்க? திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை.. கணவரின் தொந்தரவால் சோகம்.!

suicide

குற்றவாளியின் தாய் தற்கொலை

இதனிடையே, காவல் ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையிலான காவல்துறையினர், மூலைக்கரைப்பட்டி ரெட்டார் குளத்தில் வசித்து வரும் ராமகிருஷ்ணன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும், இவரின் வீட்டில் இருந்து நகைகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், காவல்துறை விசாரணைக்கு பயந்து, ராமகிருஷ்ணனின் தாய் மீனாட்சி (வயது 60), இன்று தற்கொலை செய்துகொண்டார்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு புதுத்துணி எங்கே? விரக்தியில் புதுமணப்பெண் தற்கொலை.. துக்கத்தில் கணவரும் விபரீதம்.!