#BREAKING : தேவா பற்றி கேட்ட செய்தியாளர்.. இளையராஜா டென்ஷனாகி சொன்ன வார்த்தை.!
"புருஷனை உன்னோட சேர்த்து வைக்கிறேன்" ஜோதிடரின் சித்து வேலை.! வெறி தீர கொன்ற பெண்மணி.!

தனியாக இருந்த தம்பதி
கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோயில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த ஜான் ஸ்டீபன் என்ற 64 வயது நாட்டு வைத்தியர் ஜோதிடம் பார்த்து வந்துள்ளார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் திருமணம் மற்றும் படிப்பு என்று பெற்றோரை பிரிந்து வெளியூரில் இருக்கின்றனர். கணவன் மற்றும் மனைவி இருவரும் மட்டும்தான் ஆசாரிப்பள்ளத்தில் வசித்து வருகின்றனர்.
மர்ம மரணம்
கடந்த ஜனவரி 8ம் தேதி ஜோதிடர் மனைவி விஜயகுமாரி வெளியில் சென்றுள்ளார். அதன் பின் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஜான் ஸ்டீபன் பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம மரணம் என வழக்கு பதிந்து விசாரித்ததில் அவர் கொலை செய்யப்பட்டதை உடற்கூறு ஆய்வு உறுதி செய்தது.
இதையும் படிங்க: "என் பாய் பெஸ்ட்டியை, என்னோடு சேர்த்து வையுங்க போலீஸ்".. குடித்துவிட்டு பெண் ரகளை.!
9.50 லட்சத்தில் பரிகாரம்
அதன் பின், தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் கட்டி மாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி என்ற 43 வயது பெண்ணுக்கு இந்த கொலையில் சம்பந்தம் இருப்பது கண்டறியப்பட்டது.
அவரை பிடித்து விசாரித்ததில் கணவரை பிரிந்து கலையரசி வசித்து வருவதாகவும், பிரிந்து சென்ற கணவரை சேர்த்து வைப்பதாக கூறி ஜோதிடர், ஜான் ஸ்டீபன் 9.50 லட்சம் வரை பணம் வாங்கி பூஜை செய்து இருக்கிறார்.
பேஸ்புக் நண்பருடன் திட்டம்
ஆனால், கலையரசியின் கணவர் திரும்பி வந்து அவருடன் சேர்ந்து வாழ வில்லை. பரிகாரம் பலன் அளிக்காததால் தன் பணத்தை கொடுக்குமாறு கலையரசி கேட்க ஆரம்பித்துள்ளார். ஜான் ஸ்டீபன் அதனை கொடுக்க மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த கலையரசி அவரை கொலை செய்ய திட்டம் தீட்டி, தனது பேஸ்புக் நண்பரான நம்பிராஜன் (25 வயது) என்பவரின் உதவியை நாடியுள்ளார்.
தரையில் தலையை அடித்து கொலை
இருவரும் சேர்ந்து கடந்த 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்த ஜான் ஸ்டீபனை தாக்கியுள்ளனர். கழுத்தில் துண்டால் இறுக்கி, தரையில் தலையை அடித்து கொன்றுள்ளனர். அதன் பின் எதுவும் நடக்காதது போல அங்கிருந்து அவர்கள் தப்பியோடி இருக்கின்றனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: #Breaking: கனிமவளக்கொல்லையை எதிர்த்த அதிமுக நிர்வாகி கொடூர கொலை.. எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.!