#Breaking: மத்திய பட்ஜெட் 2025 - தமிழ்நாட்டுக்கு ஏமாற்றம்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வேதனை.! 



TN Finance Minister Thangam Thennarasu On Budget 2025

 

2025 - 2026 மக்களவை கூட்டத்தொடர், இன்று பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. இந்த மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரம்பு அதிகரிப்பு, புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு வரிச்சலுகை மற்றும் வரிவிலக்கு உட்பட பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 

மேலும், புதிய வருமான வரி சட்டம் 2025 அடுத்த வாரம் தனியாக தாக்கல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச்சட்டம் அனைவரையும் சென்று சேரும் வகையில், பல விஷயங்கள் ஏளிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தொலை நோக்குச் சிந்தனை கொண்ட பட்ஜெட்; அண்ணாமலை பாராட்டு.!

அண்ணாமலை வரவேற்பு

இந்நிலையில், பட்ஜெட் 2025 க்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய பட்ஜெட் 2025 தொலைநோக்கு எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டுக்கள் தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வருமான வரி வரம்பு உயர்தலுக்கு பாராட்டினாலும், தமிழ்நாட்டுக்கு திட்டம் இல்லை என விமர்சித்தார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு எதிர்ப்பு

இந்நிலையில், தமிழ்நாடு மாநில நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "தேசிய வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டுக்கான வளர்ச்சி திட்டங்கள் ஏதும் பட்ஜெட் 2025 - 2026 ல் இல்லை. இது ஏமாற்றத்தை அளிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை" என தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: #Breaking: மத்திய பட்ஜெட் 2025 எப்படி? - எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்.!