ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
#Breaking: "திமுக பெண்களை ஏமாற்றிவிட்டது.. நாமும் ஒட்டு போட்டோமே" - நடிகர் விஜய் பரபரப்பு வீடியோ.. மகளிர் தின வாழ்த்துடன் ட்விஸ்ட்.!

திமுக தலைமையிலான அரசு இத்தனை ஏமாற்றத்தை தரும் என யாரும் நினைக்கவில்லை என விஜய் பேசினார்.
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 08, 2025 இன்று சிறப்பிக்கப்படுகிறது. மனதைரியம், விடாமுயற்சி, பாசம், அரவணைப்பு, நிர்வகிக்கும் திறன் என பல விஷயங்களில் தனது சேவையை குடும்பத்திற்காகவும், நாட்டுக்காகவும் செய்து வரும் பெண்களை போற்றும் வகையில், பெண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.!
இந்த நாளில் பெண்களின் பணி, மிச்சத்தக்க செயல் ஆகியவற்றை போற்றி பலரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக வெற்றிக்கு கழகத்தின் தலைவர் விஜய், மகளிர் தினால் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இத்துடன் சில அரசியல் தகவலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மகளிர் தின வாழ்த்து
இதுதொடர்பான விஜய் வெளியிட்டுள்ள வீடியோவில், "அனைவருக்கும் வணக்கம். இன்று மகளிர் தினம், தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா, அக்கா, தங்கை, தோழிகள் என அனைவர்க்கும் மகளிர் தின வாழ்த்துக்கள். சந்தோசமா? பாதுகாப்பு இருந்தால் தானே சந்தோசம் இருக்கும். பாதுகாப்பு இல்லாமல் சந்தோசம் எப்படி? என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது.
நீங்களும், நாமும் சேர்ந்தே திமுக அரசை தேர்வு செய்தோம். ஆனால், அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது. எல்லாமே இங்கு மாற்றும், மாற்றத்துக்கு உரியதுதான். 2026 சட்டப்பேரவை தேர்தலில், நாம் அனைவரும் சேர்ந்து, மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய திமுகவுக்கு உரிய பாடம் புகட்டுவோம். திமுக அரசை மாற்றுவோம். மகளிர் தினமான இன்று அதற்கான உறுதி ஏற்போம். அனைத்து சூழலிலும் உங்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக நான் நிற்பேன். நன்றி" என பேசினார்.
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
இதையும் படிங்க: அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை? அரசியலில் யாரும் எதிர்பாராத தகவல் லீக்.!