கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
ஒருநாள் லீவு கேட்டு, வருடத்துக்கே 1 நாள் வேலை?.. வைரலாகும் முதலாளி - பணியாளர் உரையாடல்.!
பணியாற்றும் இடத்தில் ஒருநாள் விடுமுறை கேட்டால் எப்படியெல்லாம் தட்டிக்கழிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.
முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், "ஒருநாள் லீவு கேட்டது குத்தமா?.. நான் வேலைசெய்யும் அலுவலகத்தில், முதலாளியிடம் ஒரு நாள் லீவு கேட்டேன் என்று தொடங்கி, முதலாளிக்கும் - விடுமுறை கேட்டவருக்கு இடையே உரையாடல் நடக்கிறது. அந்த உரையாடலில்,
முதலாளி : வருடத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?.
பணியாளர் : 365 நாட்கள் உள்ளது.
முதலாளி : இவற்றில் எத்தனை வாரம் உள்ளது?.
பணியாளர் : 52 வாரங்கள் சார்.
முதலாளி : வருடத்தில் எத்தனை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உள்ளது?.
பணியாளர் : 104 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஐயா.
முதலாளி : ஆக., மொத்தத்தில் 261 நாட்கள் மீதம் உள்ளது. ஒரு நாளைக்கு மொத்தம் எத்தனை மணிநேரம் வேலை செய்கிறாய்?.
பணியாளர் : 8 மணிநேரம் சார்.
முதலாளி : மீதமுள்ள 16 மணிநேரம் என்ன செய்கிறாய்?. வீட்டில் இருக்கிறாய். அதானே?.
பணியாளர் : ஆமாம் சார்.
முதலாளி : 16 மணிநேரத்திற்கும் கூட்டி, அதனை வருடத்திற்கு கணக்கிட்டு கூறுங்கள். எத்தனை நாட்கள் வீட்டில் இருக்கிறீர்கள்?.
பணியாளர் : 175 நாட்கள்
முதலாளி : ஆக, 175 நாட்கள் வீட்டில் இருக்கிறீர்கள். இப்போது மீதம் எத்தனை நாட்கள் உள்ளன?.
பணியாளர் : 91 நாட்கள் உள்ளது சார்.
முதலாளி : ஒரு நாளில் டீ குடிக்க 30 நிமிடம் எடுத்துக்கொள்கிறீர்கள். 30 நிமிடத்தை வருடத்திற்கு பாருங்கள்.
பணியாளர் : 23 நாட்கள் சார்.
முதலாளி : மீதமுள்ள நாட்கள் எத்தனை?.
பணியாளர் : 23 நாட்கள் உள்ளது சார்.
முதலாளி : மீதமுள்ள நாட்கள்?.
பணியாளர் : 78 நாட்கள் உள்ளது சார்.
முதலாளி : இதில், நாளொன்றுக்கு உணவுக்கு 1 மணிநேரம். அதன்படி, 46 நாட்கள் வரும். இதனை கழித்தால் மீதமுள்ள நாட்கள் எத்தனை?.
பணியாளர் : 22 நாட்கள் சார்.
முதலாளி : 22 நாட்களில் உடல்நிலை சரியில்லை என்று 2 நாட்கள் விடுப்பு எடுப்பீர்கள். இப்போது எத்தனை நாட்கள்?.
பணியாளர் : 20 நாட்கள் சார்.
முதலாளி : இந்த 20 நாட்களில் 5 நாட்கள் சொந்த வேலை என விடுமுறை எடுப்பீர்கள். இப்போது எத்தனை நாட்கள்?.
பணியாளர் : 15 நாட்கள் ஐயா.
முதலாளி : இந்த 15 நாட்களில் வருட விடுமுறை நாட்கள் என 14 நாட்கள் எடுத்துக்கொள்வீர்கள். இப்போது மீதம் எத்தனை நாட்கள் உள்ளன?.
பணியாளர் : 1 நாட்கள் எஜமானே.
முதலாளி : ஆக, அந்த ஒரு நாளுக்கு விடுமுறை கேட்டு இப்போது வந்துள்ளேர்கள்?..
பணியாளர் : No words...." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியாற்றும் இடத்தில் ஒருநாள் விடுமுறை கேட்டால் எப்படியெல்லாம் தட்டிக்கழிக்கிறார்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு இந்த பதிவு வைரலாகி வருகிறது. ஆனால், சில நிறுவனங்களில் அப்படி அல்ல., ஒருசில நிறுவனத்தின் உரிமையாளர்கள் இவ்வாறாக செயல்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வருடத்திற்கு முன்னதாக ஆசிரியர் போராட்டம் நடைபெறும் போது, இதனைப்போல பதிவொன்று வைரலாகியது. அதுபோல உள்ள பதிவு தற்போது மாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும், முதலாளியின் கணக்குப்படியே குறைந்த நாட்கள் வேலை பார்த்தே அவ்வுளவு வருமானம் ஈட்டுகிறார், சம்பளம் சரிவர தருவது இல்லை. முழுநேர உழைப்பாளி யாரேனும் இவர்களுக்கு கிடைத்துவிட்டால், அவரின் நிலைமை என்ன? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.